The Indian Times

ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி… காஷ்மீரில் நம்ம லெஜெண்ட் அண்ணாச்சி.. ஆளு செம்ம மாஸா மாறிட்டாரே

சரவணா ஸ்டோர் சரவணன் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.தற்போது இவர் அடுத்ததாக முழு காதல் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது

Advertisement

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.ரசிகர்கள் லெஜெண்ட் அண்ணாச்சி லியோ படத்தில் நடிக்கிறாரா என இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.புகைப்படத்தில் லெஜெண்ட் சரவணன் ஆக்ஷன் ஹீரோ போல மாறியுள்ளார்.ரசிகர்கள் புகைப்படத்திற்கு சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in