The Indian Times

விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் பெரும் விபத்து… வைரலாகும் விபத்து வீடியோ

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினார்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.கடந்த முறை வெளியாகிய வீரமே வாகை சூடும் படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.தற்போது இவருக்கு அடுத்ததாக மார்க் ஆண்டனி படம் வெளியாக உள்ளது

Advertisement

இயக்குனர் ஆத்விக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார்,இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இன்று இப்படத்தின் படப்பிடிப்பில் லாரி ஒன்று சுவற்றை இடித்துக்கொண்டு வரும் காட்சி படமாக்கபட்டுள்ள நிலையில் சுவற்றை உடைத்த லாரி கட்டுப்பாட்டை இழந்து நிற்காமல் செட்டின் மேல் மோதியது.இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in