The Indian Times

தலயின் தாறுமாறான ஆட்டத்தில் CHILLA CHILLA வீடியோ பாடல் வெளியாகியது

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு துணிவு என படக்குழு பெயரிட்டுள்ளது.கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்,ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ,போனி கபூர் இப்படத்தினையும் தயாரித்துள்ளார்

Advertisement

தற்போது இப்படம் பொங்கலுக்கு வெளியாகி உள்ளது.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் வரவேற்பினை அளித்தனர்.இப்படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தின் வீடியோ பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது.ரசிகர்கள் தல அஜித்தின் நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.இப்பொழுது கேட்டாலும் இப்பாடலுக்கு வெறித்தனமாக ஆடணும் போல உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

Embed video credits : ZEE STUDIOS SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in