The Indian Times

முதல் நாளிலேயே மொத்த வசூலையும் கொத்தாக அள்ளிய வாத்தி… எத்தனை கோடிகள் தெரியுமா?

நடிகர் தனுஷ் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ,ஆங்கிலம் என பல மொழி சினிமாவிலும் கலக்கி வருபவர். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது,அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென்ற ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ்.கோலிவுட்டில் ஆரம்பித்து ஹாலிவுட் வரை இவரது கொடி பறக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் தனுஷின் கடின உழைப்பு தான்.ஒரே நேரத்தில் அனைத்து மொழி சினிமாவிலும் கலக்கி வருகிறார் தனுஷ் என்று கூறினால் மிகையாகாது.

Advertisement

இவர் தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.நல்ல கருத்துக்களை படம் கூறியுள்ளதாக கூறி ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தினை கண்டு வருகின்றனர்.நாளுக்கு நாள் வாத்தி படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இப்படம் நேற்று வெளியாகிய முதல் நாளிலேயே உலகம் முழுவதும் சுமார் ரூ.10கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.இது நிச்சயம் பெரிய வசூல் தான், ஆனால் இந்த வசூல் நடிகர் தனுஷ் பெற்ற திருச்சிற்றம்பலம் வசூலை விட குறைவு தான் என கூறப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in