The Indian Times

டேய் தம்பி நீ நல்லா வருவடா… சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு கேக் ஊட்டி வாழ்த்திய மிஷ்கின்

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே கவர்ந்துள்ளார் இவர்.மெரினா படத்தின் மூலம் சாதாரண கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று இவரது படங்கள் 100கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

பல ஆண்டுகளாக நடித்து வரும் எவராலும் இத்தகைய வசூலை குறுகிய காலகட்டத்தில் பெற முடியாத நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 10 வருடங்களில் அதனை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார்.காரணம் டாக்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பதால்.அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது.இதனால் அதிக கவனத்துடன் இவரது அடுத்தப்படமான மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் மூலம் இவர் மீண்டும் முன்னணியில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

Advertisement

இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது,மேலும் படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு படக்குழு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளது.அப்பொழுது கேக் வெட்டி சிவகார்த்திகேயன் அதனை மிஷ்கினுக்கு ஊட்டியுள்ளார்,மிஷ்கினும் கேக் எடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஊட்டியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை சிவகார்த்திகேயனுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in