The Indian Times

இது புது கதையும் கிடையாது.. ஆந்திரா மசாலாவை படத்துல பூசிட்டாங்க… வாத்தி படத்தை வறுத்தெடுத்த BLUESATTAI மாறன்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்பாடலின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் சினிமாவில் கொடிகட்டி பறக்க தொடங்கினார்.தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற நடிகர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் உயர்ந்துள்ளார் மேலும் பாலிவுட்டில் இருந்து தற்போது ஹாலிவுட்டிற்கு சென்று அங்கேயும் கலக்கு கலக்கி வருகிறார் தனுஷ்.தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தினை BLUESATTAI அவரது ஸ்டைலில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.அதன்படி அவர் கூறியதாவது,படத்துல ஆந்திரா மசாலாவை பூசி வச்சிருக்காங்க,முதல் பாதி நல்லா இருந்துச்சு இரண்டாவது பாதி பயங்கர மசாலாவா இருக்கு,இது புதிய கதை இல்லை,ராட்சசி,சாட்டை போன்ற படங்கள் எல்லாம் முன்னாடியே வந்துட்டு.படத்துல நல்ல கருத்து இருக்கு ஆனா உங்க கருத்தெல்லாம் யாருக்கு வேணும்,கருத்து சொல்லுறதா இருந்தா எனக்கு மெசேஜ் பண்ணுங்க என கூறி பங்கமாக கலாய்த்துள்ளார்.

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in