The Indian Times

யோகிபாபுவின் மண்டேலா official ட்ரைலர்!

இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இன்று எந்த இயக்குனர் படம் எடுத்தாலும் தன் படத்திற்காக நகைச்சுவை நடிகர் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை பற்றி யோசித்தால் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருபவர் யோகி பாபுவாக தான் இருப்பார். ஒரு காலத்தில் காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் , வடிவேலு , விவேக் , சந்தானம் ஆகியோர் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். ஆனால் இன்றோ சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் புடித்த காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு நடித்தாலே அதற்கென்றே மக்கள் படத்தை பார்க்க வருகிறார்கள்.

Advertisement

தற்போது இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் ஹேர்ஸ்டைல் பார்த்தே சிரித்து விடும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் தற்போது யோகி பாபு மண்டேலா என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை தர்மம் , குரங்கு பொம்மை போன்ற படங்களை இயக்கிய மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டீசரே படம் அரசியல் கலந்த காமெடி படமாக இருக்கும் என்பதை எடுத்துரைத்தது.நெல்சன் மண்டேலா என்றழைக்கப்படும் யோகி பாபு ஒரு வித்தியாமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று பார்க்கும்போதே தெரிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in