The Indian Times

நடிகராக மாறிய இயக்குனர் மாரி செல்வராஜ் ! கர்ணன் teaser making

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய இயக்குனர்கள் தற்போது அதிகம் காணப்படுகின்றனர். அந்த வரிசையில் தற்போது சிறந்த இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் இது தான் இவரது முதல் படமா என்று வியந்து பார்க்க கூடிய அளவிற்கு வெற்றியை தேடி தந்தது. இந்நிலையில் தற்போது இவர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

அதிலும் கண்டா வர சொல்லுங்க பாடலை ஸ்டேட்டஸ் வைக்காத ஆட்களே இருக்க முடியாது. இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தட்டான் தட்டான் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் பாட ரசிகர்களை பெரியளவில் கவர்ந்திழுத்தது. அதையும் தாண்டி தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தது கர்ணன் படத்தின் டீசர் வெளியீட்டிற்காக தான். பல எதிர்பார்ப்புகள் மத்தியில் கர்ணன் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்த டீசர்க்காக மாரி செல்வராஜ் பாட்டி ஒருவருக்கு டயலாக் பேச சொல்லிக்கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in