The Indian Times

விருது வழங்கும் விழாவில் அசிங்கப்படுத்தப்பட்ட இயக்குனர் நெல்சன்.. பொங்கும் நெட்டிசன்கள்

பெரிய தடைகளுக்கு பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் நெல்சன் திலீப்குமார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார்.மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இயக்குவதில் வல்லவர் என்று ரசிகர்களிடமே நல்ல பெயரினை பெற்றவர்.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற வெற்றிப்படத்தினை கொடுத்தார் நெல்சன்.இப்படம் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

Advertisement

இந்நிலையில் தான் சன் பிக்சர் தயாரிப்பில் தளபதி விஜயை வைத்து இயக்க வாய்ப்பு நெல்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே,விடிவி கணேஷ்,அபர்ணா தாஸ், செல்வராகவன், என பெரும் நடிகர்கள் கூட்டமே நடித்தது.பல கோடிகளில் மால் போன்ற செட்டப்புகள் அமைக்கப்பட்டு பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியது.கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தினை தொடர்ந்து இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை விஜய் ரசிகர்கள் வைத்திருந்தனர்.இருந்தாலும் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Advertisement

இப்படம் எதிர்பாராத தோல்வியை பெற்றதினால் நெல்சன் திலீப்குமாரை கலாய்க்க தொடங்கிவிட்டனர். இவ்வாறு நெட்டிசன்கள் நெல்சனை கலாய்த்து பின்னுக்கு தள்ளியுள்ளார்கள்.இதனால் இவர் அண்மையில் கலந்துகொண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவரை வரவேற்க ஒருத்தர் கூட வரவில்லை அதே சமயம் பிற இயக்குனர்கள் வருகையில் அவர்களுக்கு பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் திரும்பி ஜெயிலர் படத்தின் மூலம் கெத்தாக வரவேண்டும் என அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in