The Indian Times

நடிகர் அர்ஜுன் தாஸ் VOICE பேசி அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்திய ராமர்

விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன், சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5ல் வெற்றிபெற்ற ராஜூவை வைத்து ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.பிற நிகழ்ச்சிகளை போல இந்த நிகழ்ச்சிக்கும் காமெடிக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து மற்றும் விஜய் டிவி ராமர் ஆகியோர் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.அனைவர்க்கும் மிக பிடித்த கலைஞர் விஜய் டிவி ராமர்,அவரது நகைச்சுவையை ரசிக்கவே ஒரு பெரிய கூட்டம் உள்ளது.அந்தளவுக்கு ரசிகர்கள் சொந்தங்களை தனது திறமையால் சேர்த்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ராமர் செய்த நகைச்சுவை தொகுப்பை ஒரு வீடியோவாக விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அசார் நான் பேசுபவரை போல நீங்கள் பேச வேண்டும் என்று கூற அதற்கு ராமரும் ஓகே என கூறி போட்டியில் குதிக்கின்றனர்.அசார் நடிகர் அர்ஜுன் தாஸ் குரலில் பேசி காட்டவே அதை நகைச்சுவையாக பேசி அசத்தி அரங்கையே ராமர் அதிர வைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

https://www.youtube.com/watch?v=zbBQNckJX8s&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : Vijay Television 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in