The Indian Times

என் குடும்பம் தான் எனக்கு எல்லாம்.. மனைவி மகன்களுடன் கைகோர்த்த விக்னேஷ் சிவன்

போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் ஆகியவர் விக்னேஷ் சிவன்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இருப்பினும் நம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.இந்த படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை தமிழில் இயக்கி வருகிறார்.அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று ரூ.66 கோடி ரூபாய் வசூலையும் பெற்றது.

Advertisement

இவர் அடுத்ததாக அஜித் குமார் வைத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தினை இயக்க உள்ளார்.இவர் கூறிய கதையில் அஜித்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு திருப்தி இல்லை இதனால் இப்படத்தின் கதையினை மாற்ற இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு தயாரிப்பு நிறுவனமும் அஜித்தும் 8 மாத கால அவகாசத்தினை கொடுத்துள்ளது,இதற்கிடையில் இவருக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் முடிந்தது,திருமணம் முடிந்த கையோடு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று கதையில் எந்த மாற்றத்தினையும் செய்யாமல் மீண்டும் லைக்கா நிறுவனத்திடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் இயக்குனர் விக்னேஷ் சிவனை அஜித்தின் 62வது படத்தில் இருந்து நீக்கி புதிய இயக்குனரை லைக்கா நிறுவனம் தேடி வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வந்தது.இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மனைவி நயன்தாரா மற்றும் மகன்களுடன் கைகோர்த்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவில் அவர் அன்பை பற்றி பேசியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in