The Indian Times

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலின் GLIPMSE இதோ… அகநக பாடல் GLIMPSE

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார்.இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படத்தினை மணிரத்தினம் கடந்த ஆண்டு முதல் பாகத்தினை வெளியிட்டு இருந்தார்.இப்படத்தின் இரண்டாவது பாகம் ஏற்கனவே முதல் பாகத்துடனே எடுக்கப்பட்டுள்ளதால் இரண்டாவது பாகமும் தயாராகி உள்ளது,

Advertisement

இப்படத்தின் இரண்டாவது பாகத்தினை அடுத்த மாதம் இறுதியில் வெளியிட லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.முதல் பாகத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்தது போல் இப்படத்திலும் அவர் தான் இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் முதல் பாடலை நாளை படக்குழு வெளியிட உள்ளது.இந்நிலையில் இப்பாடலின் சில நிமிட காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in