The Indian Times

மகாலக்ஷ்மி உனக்கு நிகர் யாருமில்ல.. மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரவீந்தர்

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நடிகை மகாலட்சுமி பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இருவரும் குறித்து அதிக விமர்சனங்கள் இணையத்தில் எழுப்பப்பட்டது,இவர்களை பற்றித்தான் அனைத்து பத்திரிக்கைகளும் எழுதியது,அந்தளவிற்கு இவர்களது திருமணம் பிரபலம் ஆகியது.லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கடைசி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.விரைவில் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இன்று மஹாலக்ஷ்மியின் பிறந்தநாளை முன்னிட்டு ரவீந்தர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்,மேலும் மனைவிக்கு பரிசாக மல்லிகை பூவை வாங்கி கொடுத்து,இந்த மல்லிகை பூவுக்கும் நிகரில்லை உனக்கும் நிகரில்லை என கூறியுள்ளார்.மேலும் உன்னிடம் இருக்கும் காசுக்கு நீ என்ன பொருளை எல்லாம் வேண்டுமோ அதை வாங்கிக்கலாம் ஆனால் இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற பரிசு என கூறி அசத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

 

View this post on Instagram

 

A post shared by Ravindar Chandrasekaran (@ravindarchandrasekaran)

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in