The Indian Times

முழுசாக வேட்டைய ராஜாவாக மாறிய ராகவா லாரன்ஸ்…வெறித்தனமா இருக்காரே லாரன்ஸ்… சந்திரமுகி 2 புகைப்படம் வைரல்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ,மாபெரும் வரவேற்பினை பெற்ற படம் சந்திரமுகி.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.மேலும் இவர்களுடன் பிரபு,ஜோதிகா,நாசர் வடிவேலு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.வித்யாசாகர் இசையில் உருவாகி இருந்த இப்படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று அசத்தியது.பல நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது சந்திரமுகி.இன்றுவரை இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்று வரை இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதனை காண்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது.

Advertisement

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் வெளியாகி இருந்தது.இதுகுறித்து இயக்குனர் வாசு எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையுமே வெளியிடாமல் இருந்தார்.சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் லாரன்ஸ் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.இப்படத்தில் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்காமல் லாரன்ஸ் அவரது ஆசியுடன் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்

Advertisement

இந்நிலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் ஸ்ருஷ்டி,லட்சுமி மேனன் ,ராதிகா மற்றும் வடிவேலு என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது.இந்நிலையில் இப்படத்தில் வேட்டையராஜா மற்றும் சந்திரமுகியாக கெட்டப் போட்டிருக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதில் இருவருமே கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in