The Indian Times

விருமாண்டி பட நாயகி அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை அபிராமியை தமிழ் சினிமாவில் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது, விருமாண்டி படத்தில் அன்னலக்ஷ்மியாக கமலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் அபிராமி.

இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுனுக்கு ஜோடியாக வானவில் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்,முதல் படத்தில் தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து சார்லி சாப்ளின், மிடில் கிளாஸ் மாதவன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இவரின் நடிப்பினை பார்த்து கமல்ஹாசன் வியந்து தான் இவரை விருமாண்டி படத்தில் கதையின் நாயகியாக தேர்வு செய்தார்,விருமாண்டி படத்தில் இவரது நடிப்பு இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது,தற்போது இவர் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் 2014ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கடந்த ஆண்டு குழந்தையை தத்தெடுத்துள்ளார்,

இந்த குழந்தைக்கு கல்கி என பெயரிட்டுள்ளார். குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தற்போது இவர் எடுத்த மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in