The Indian Times

விவேக்கோடு fun செய்த செல் முருகன்! நினைவுகளை பகிர்ந்து சோகத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு. விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார்.

Advertisement

இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட. இந்த மாமனிதரின் இறப்பிற்கு பல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

இந்த இழப்பு தமிழ் சினிமாவிற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் தமிழ் சினிமாவிற்கு எந்தளவுக்கு மிக பெரிய இழப்போ அதே போல் செல் முருகனுக்கும் விவேக் அவர்களின் இறப்பு மிக பெரிய இழப்பு. அவரோடு நெருங்கி இருந்த நண்பர் செல் முருகன் தான். தற்போது அவர் விவேக்கோடு இருந்த நினைவுகளை விடியோவாக ட்விட்டரில் share செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in