The Indian Times

லிப்ட் படத்தின் இன்னா மயிலு பாடல் | கவின் அம்ரிதா ஐயர்.

விஜய் டிவியின் மூலம் பிரபலமான நபர்களுள் ஒருவர் கவின் ராஜ். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கனா காணும் காலங்களுக்கு அடுத்து இவர் சரவணண்மீனாட்சி சீரியலில் நடித்தது அனைவரையும் கவர்ந்ததுஅதன் பிறகு கவின் விஜய் டிவி யின் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர் என்பது நிதர்சனமான உண்மை.

Advertisement

சமீபத்தில் கூட இவரது அஸ்கு மாரோ பாடல் வெளியாகி வைரலானது. தற்போது இவர் லிப்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்த படத்தின் first look மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த படத்தில் அம்ரிதா ஐயர் ஜோடியாக நடித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீகில் திரைப்படத்தின் மூலம் பல தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வருபவர் அம்ரிதா ஐயர்.

Advertisement

அதன் பிறகு சமீபத்தில் வணக்கம் டா மாப்ளே படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது லிப்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார் அம்ரிதா. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான இன்னா மயிலு என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in