The Indian Times

” அது என்னுடைய குரல் இல்லை” கர்ணன் படத்தின் உண்மையை உடைத்த லால்! காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய நிறைய இயக்குனர்கள் தற்போது உருவாகி கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இரண்டே படங்களில் மக்களின் மனதை முழுவதுமாய் கவர்ந்து இழுத்தவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்து தனுஷை வைத்து மாரி செல்வராஜ் எடுத்த படம் தான் கர்ணன். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்தார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.

Advertisement

தாணு தயாரிக்க படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் தனுஷ் மட்டுமல்ல படத்தில் ண்ணடித்த அணைத்து கலைஞர்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு நீண்ட நாள் கழித்து கம்பாக் கொடுத்த மலையாள நடிகர் லால் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார். இவர் இதற்கு முன்பு தமிழ் படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் அவருக்கு கிடைத்த பாராட்டுகள் முந்தைய படங்களில் கிடைக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் தற்போது லால் ஒரு உண்மையை உடைத்துள்ளார். அதாவது கர்ணன் படத்தில் அவர் டப்பிங் செய்யவில்லை , அவருக்கு வேறொரு திருநெல்வேலியை சேர்ந்த நபர் தான் டப்பிங் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். இதை பற்றி அவரிடம் கேட்டதற்கு , கர்ணன் படத்தில் முழுவதும் திருநெல்வேலி ஸ்லாங்கில் பேச வேண்டியதாக இருந்தது. அது எனக்கு வரவில்லை என்ற காரணத்தால் திருநெல்வேலியை சேர்ந்த மற்றொரு நபர் எனக்கு டப்பிங் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in