The Indian Times

குலை நடுங்க வைக்கும் THRILLER… GV பிரகாஷ் நடிப்பில் 13 படத்தின் TEASER இதோ

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.

Advertisement

தற்போது ஜிவி பிரகாஷ் இயக்குனர் விவேக் இயக்கத்தில் 13 என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன் நடித்துள்ளார்.சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மெட்ராஸ் ஸ்டுடியோஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது,டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : Think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in