The Indian Times

அசால்ட்டாக வானத்தில் இருந்து குதித்து SKY DIVING செய்த நடிகை நஸ்ரியா…  என்ன பயப்படவே மாட்டுக்காரு

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.தற்போது இவர் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகியது.

Advertisement

தற்போது துபாய் சென்றுள்ள நடிகை நஸ்ரியா அங்கு ஸ்கை டைவிங் செய்துள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் நஸ்ரியாவின் திறமையை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.மேலும் எப்படி இப்படி பயப்படாம குதிக்கிறீங்க என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in