The Indian Times

தர லோக்கல் வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி… சந்தீப் கிஷன் நடிப்பில் மைக்கேல் TRAILER வெளியாகியது

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன்.ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பினை பெற்று 66 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது,இப்படத்தினை தொடர்ந்து விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இன்று பலரின் மனதினையும் கவர்ந்துள்ளார்.கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.ரஜினி,கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தும் மிரட்டிவிட்டார்.தற்பொழுது மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு என்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.

Advertisement

தற்போது இவர் நடிகர் சந்தீப் கிஷன் உடன் இணைந்து மைக்கேல் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.கரண் சி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவர்களுடன் கவுதம் மேனன்,வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்கள்.தற்போது இப்படத்தின் ட்ரைலெர் படக்குழு வெளியிட்டுள்ளது,ட்ரைலரில் விஜய் சேதுபதி கண்களிலேயே வில்லன் நடிப்பினை காட்டி அனைவரையும் அசர வைத்துள்ளார்.மேலும் மற்றொருபுறம் சந்தீப் கிஷன் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பது ட்ரைலரில் காண முடிகிறது.மாநகரம் படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து சந்தீப் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்

Embed video credits : Adityamusictamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in