செலவு லட்சங்களில் வரவு கோடிகளில்… மலைபோல வசூலை குவிக்கும் காந்தாரா

பிற மொழி படங்கள் தமிழில் வெற்றிபெறவும் தமிழ் ரசிகர்களை ஈர்ப்பதற்கு சில நாட்கள் ஆகும்.கேஜிஎப் படமும் தமிழில் எடுத்த உடனே வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வரிசையில் வெளியாகி பல நாட்கள் கழித்து தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் படம் காந்தாரா.கன்னட மொழி படமான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

செலவு லட்சங்களில் வரவு கோடிகளில்... மலைபோல வசூலை குவிக்கும் காந்தாரா 1

விளம்பரம்

இப்படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது படக்குழு இப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்து தமிழகத்தில் ரிலீஸ் செய்துள்ளது.இப்படத்தினை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி இவரே கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.கேஜிஎப் படத்தினை தயாரித்த HOMBALE தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரித்துள்ளது. அஜனீஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சப்தமி கௌடா நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

செலவு லட்சங்களில் வரவு கோடிகளில்... மலைபோல வசூலை குவிக்கும் காந்தாரா 2

விளம்பரம்

இப்படம் உலகளவு வசூல் சாதனை படைத்து வருகிறது.இப்படம் வெளியாகி இதுவரை 100 கோடிக்கும் மேல லாபத்தினை பதிவு செய்துள்ளது.நான்கு மொழிகளில் சேர்த்து இப்படம் 150 கோடி ருபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இப்படத்தின் பட்ஜெட் 15 கோடி ருபாய் தானாம்.இது பெரும் ஆச்சரியத்தினை கன்னட சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது.இதிலிருந்து படத்திற்கு பிரம்மாண்டம் தேவையில்லை நல்ல கதை இருந்தாலே போதுமானது ஆகும்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment