The Indian Times

இயக்குனர் மித்ரனை கலாய்த்த நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அப்பா,அண்ணனை போல் தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என துணை இயக்குனராக மணிரத்தினத்திடம் பணியாற்றினார்.பின்னர் நடிகராக களம் இறங்கிவிட்டார்.அமெரிக்கா சென்று படித்த நடிகர் கார்த்தி தனது முதல் படமான பருத்திவீரன் படத்தில் மதுரை ஆளாக நடித்து அந்த மொழிகளிலேயே பேசி அனைவரையும் ஆச்சரியப்பட செய்தார்.முதல் படமே பெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகராக கார்த்தியை உருவாக்கியது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பையா படத்தில் நடித்தார்.அப்படமும் பெரும் ஹிட் கொடுத்தது இவருக்கு.இவ்வாறு தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பட்டியலில் கார்த்தியும் குறுகிய காலத்திலேயே இணைந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக பெரும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மேலும் தொடர்நது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கார்த்தி.அந்த வரிசையில் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.தற்போது டப்பிங் பனியின் பொழுது இயக்குனர் மித்ரனை கார்த்தி கலாய்த்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது

Advertisement

டப்பிங்கில் நீங்க கமல்ஹாசன் சார் மாதிரி இந்த வசனத்தினை பேச வேண்டும் என கூறவே எங்க நீங்க பேசுங்க என கூறி கேலி செய்துள்ளார். நமக்கு என்ன வருமோ அந்த ஸ்டைலை போயிடுவோம் என கிண்டலாக கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் எப்பொழுது படம் வெளியாகும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.ஏற்கனவே அவர் இரட்டை வேடத்தில் நடித்த சிறுத்தை படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் இப்படமும் இவருக்கு வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in