இவரு ஒரு ஏமாத்துக்காரர் …இயக்குனர் பார்த்திபனை திட்டி தீர்த்த BLUESATTAI மாறன்

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார். மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

இவரு ஒரு ஏமாத்துக்காரர் ...இயக்குனர் பார்த்திபனை திட்டி தீர்த்த BLUESATTAI மாறன் 1

விளம்பரம்

இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்..இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகியது.தற்போது இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.சென்னையில் இப்படம் முதல் காட்சிகள் காலை 5 மணிக்கே திரையிடப்பட்டுள்ளது.சினிமா ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்தினை விமர்சனம் செய்த விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பார்த்திபன் மக்களை ஏமாற்றிவிட்டார்,ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பல படம் உள்ளது,இது உலகின் முதல் படம் இல்லை என கூறி எதிர்மறை விமர்சனம் செய்தார்.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

இவரு ஒரு ஏமாத்துக்காரர் ...இயக்குனர் பார்த்திபனை திட்டி தீர்த்த BLUESATTAI மாறன் 2

விளம்பரம்

மாறனின் இந்த குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே ஒருமுறை ட்வீட்டர் பக்கத்தில் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்திருந்தார் பார்த்திபன்.மேலும் பல பத்திரியாளர்கள் சந்திப்பிலும் இதுகுறித்து கேட்டபொழுது மாறனை விமர்சனம் செய்திருந்தார்.இந்நிலையில் இதுகுறித்து BLUESATTAI மாறன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,இந்த படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை,படத்தில் கதை ஏதும் இல்லை என கூறி இந்த படத்தின் விமர்சனத்தினை முடித்திருந்தேன்,ஆனால் அடுத்தநாள் பார்த்திபன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்,அதில் இதுதான் முதல் லீனியர் சிங்கிள் ஷாட் படம்,உங்களவுக்கு அறிவுஜீவி இல்லை என பேசியிருந்தார்.இதற்கு ஆதாரம் நான் கொடுத்திருந்தேன்.ஆனால் இவர் திரையரங்கு சென்று பத்திரிகையாளர்களை சந்திக்கும்பொழுது ,இதுகுறித்து நிருபர்கள் கேட்ட பொழுது ,அதற்கு தான் ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்களே என கூறுகிறார்,நான் ஆதாரமும் கொடுத்துவிட்டேன்,அதற்கு பதில் தான் கொடுக்கவேண்டும் பதிலடி இல்லை என தெரிவித்துள்ளார் மேலும்,நான் சினிமாவில் வந்துவிட்டேன்,என்னால் எதையும் செய்ய முடியாது,ஆனால் என் ரசிகர்கள் அப்படி இல்லை என பேசியுள்ளார்.மேலும் நான் 3 லட்சம் விமர்சனத்துக்கு கேட்டேன் என தெரிவித்துள்ளார்.நீங்க நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என 12 கோடி தமிழர்களை ஏமற்றிருக்கீங்க என கூறி கடுமையாக பார்த்திபனை விமர்சனம் செய்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment