The Indian Times

மாட்டுடன் உயிரை பணயம் வைத்து பயிற்சி செய்த நடிகர் சூர்யா…..வாடிவாசல் சூர்யா TRAINING VIDEO

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியை அளித்தது.அதனை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் நடிகர் சூர்யா பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் கைகோர்த்துள்ளார்.சூர்யாவின் 41வது பபடமான வணங்கான் படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.இன்று ஜூலை 23 ஆம் தேதி நடிகர் சூர்யா பிறந்தநாளை ரசிகர்கள் ஆவலாக கொண்டாடி வருகின்றனர்.மேலும் பல திரையரங்குகள் அவரின் ஜெய் பீம் மற்றும் சூரரைப்போற்று படத்தினை திரையிட உள்ளது.இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு கிடைத்துள்ளது.இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் பயிற்சி வீடியோவை கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு வைத்து படம் என்பதால் நடிகர் சூர்யா மாட்டுடன் பயிற்சி செய்துள்ள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோவில் ரசிகர்கள் சூர்யாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : Kalaipuli S thanu

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in