The Indian Times

சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட பார்த்தது இல்லை- நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.என்னதான் தற்போது மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல அடிகள்,அவமானங்கள் ஆகியவைகளை பெற்றுத்தான் இன்று சினிமாவில் உயர்ந்துள்ளார்.தற்போது இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது பெருமளவு இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் அவர் பேசியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தினையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது,கடவுள் வந்து நான் வேணுமா நிம்மதி வேணுமான்னு கேட்டா எல்லாரும் நிம்மதி வேணுன்னு தான் சொல்லுவாங்க,சந்தோசம் நிலை கிடையாது.நான் எங்கிருந்து வந்தேன்னு உங்களுக்கு தெரியும் வந்து பேரு புகழ் உச்சி எல்லாம் பார்த்துட்டேன் பெரிய பெரிய ஆள் என எல்லார் கூடையும் பழகிட்டேன் ஆனா சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட கிடையாது என தெரிவித்துள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ரஜினிகாந்துக்கே சந்தோசம் நிம்மதி இல்லையா என்பது பலருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in