அஜித்,ரகுவரன் போல பேசி அசத்திய நடிகர் மணிகண்டன்.. வைரலாகும் வீடியோ இதோ

ஜெய் பீம் படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நடிகர் மணிகண்டன்,இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் தற்போது ஜெய் பீம் படத்தில் கிடைத்துள்ளது.இவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிய படம் பீட்ஸா 2.இப்படத்தில் இவருக்கு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை.இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

அஜித்,ரகுவரன் போல பேசி அசத்திய நடிகர் மணிகண்டன்.. வைரலாகும் வீடியோ இதோ 1

விளம்பரம்

இப்படி சினிமாவில் படிப்படியாக கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு தான் ஜெய் பீம்.இப்படத்தில் தனது முழு உழைப்பையும் கொடுத்து இன்று கதாநாயகனாக உயர்ந்துள்ளார் மணிகண்டன்.தற்போது இவர் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் ரமேஷ் திலக்,பக்ஸ் ,பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

அஜித்,ரகுவரன் போல பேசி அசத்திய நடிகர் மணிகண்டன்.. வைரலாகும் வீடியோ இதோ 2

விளம்பரம்

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்க போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே இவருக்கு மிமிக்ரி தெரியும் என்பதால் அஜித் மற்றும் ரகுவரன் போல அப்படியே பேசி அசத்தியுள்ளார்.இந்தர் வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் மணிகண்டனின் திறமையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment