The Indian Times

ஷூட்டிங்கில் அடித்துக்கொண்டு விளையாடும் வெற்றி மற்றும் அபி

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நாடகம் தற்போது ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.இந்த தொடரில் வெற்றி மற்றும் அபியாக வரும் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி ஜோடி ரசிகர்களை கவர்ந்துள்ளதால் இந்த நாடகத்தினை ரசிகர்கள் விடாமல் பார்த்து வருகின்றனர்.தற்போது இந்த நாடகத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது யூடியூபில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது

Advertisement

வீடியோவில் அபி மற்றும் வெற்றி ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு விளையாடி வருகின்றனர்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இவர்கள் இருவரும் நாடகத்தில் சேர்ந்து இருந்தால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in