The Indian Times

நடிகர் நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள்

நிழல்குது என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நரேன்.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

Advertisement

இப்படம் நல்ல வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை,அஞ்சாதே போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.

அவ்வப்பொழுது தமிழ் படங்களில் நடித்து வந்த இவர்,நீண்ட இடைவெளிக்கு பிறகு கைதி படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து விக்ரம் படத்திலும் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.தற்போது கைதி 2 ஆம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

இதனை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றால் இவரே கூறியிருந்தார்.தற்போது இவருக்கு திருமணம் முடிந்து 14 ஆண்டுகள் கழித்து இரண்டாவது ஆண் குழந்தை குழந்தை பிறந்துள்ளது.

ஏற்கனவே நரேனுக்கு 14 வயதில் மகள் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது முதல் முறையாக நரேன் தனது மகனின் முகத்தினை காண்பித்துள்ளார்.இந்த புகைப்படத்தினை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்

Advertisement

இந்நிலையில் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நரேன்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in