The Indian Times

தன்னுடன் 5ஆம் வகுப்பு படித்த தோழியை மீண்டும் நேரில் சந்தித்த நடிகர் சசிகுமார்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.

இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிகராக நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெறுவதால் சரி இதனையே தொடர்ச்சியாக சில காலங்கள் செய்வோம் என தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.அண்மையில் இவருக்கு வெளியாகிய கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் ராஜவம்சம் போன்ற படங்கள் மிக பெரிய தோல்வியை அளித்தன.

இருந்தும் முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார் சசிகுமார்.

இந்நிலையில் இவர் தன்னுடன் 5ஆம் வகுப்பில் படித்த தோழி மைதிலியை நேரில் சந்தித்துள்ளார்.அப்போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு மகிழ்ந்துள்ளார் சசிகுமார்

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in