The Indian Times

Mass-ஆக BULLET ஓட்டி செல்லும் தமன்னா… மிரண்டு போன ரசிகர்கள்

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்,இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் நடித்துள்ள நிறைய ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கின்றன.இந்த ஆண்டு இந்த படங்களின் மூலம் இவர் மீண்டும் முன்னணி நடிகை என்ற பட்டத்தினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.தமிழ் படங்களில் படவாய்ப்புகள் மற்றும் கதைகள் சரியாக அமைவதில்லை என்பதால் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Advertisement

அதன்படி பப்ளி பவுன்சர் என்ற ஹிந்தி படத்தில் தற்போது நடித்துள்ளார்.இப்படம் இன்று நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.இப்படம் முழுக்க தமன்னா புல்லட் பைக் ஒட்டிக்கொண்டு வந்துள்ளார்.இதற்காக கடுமையாக பைக் ஒட்டி பயிற்சி செய்துள்ளார்.அவர் பைக் ஓட்டி பயிற்சி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் படத்திற்காக அனைத்தையும் கற்றுக்கொள்ளும் தமன்னாவின் மனப்பாங்கினை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in