பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா.அப்பாவை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நடிகராக களம் இறங்கியவர் இவர்.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.அப்பாவை வைத்து சினிமாவுக்குள் வந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இந்த இடத்தினை அடைந்துள்ளார் அதர்வா.பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.முதல் படமே நல்ல வரவேற்பினை ரசிகர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.அறிமுக படம் என்பது போல் இல்லாமல் நடித்த அனுபவம் உள்ளது போல இப்படத்தில் பட்டையை கிளப்பினார் அதர்வா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வரும் அதர்வா தற்போது இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ட்ரிக்கர் படத்தில் நடித்துள்ளார்.ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியாகிய 100 படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது,அந்த வரிசையில் இப்படமும் போலீஸ் கதாபாத்திரத்தினை மையமாக கொண்டு அமைந்துள்ளது.இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
தற்போது இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் அவரது ஸ்டைலில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த விமர்சனத்தில் இவர் கூறியதாவது,குழந்தை கடத்தல் கதை என சிந்திச்சு மொக்கையா படம் எடுத்து வச்சிருக்காங்க,எந்த ஒரு பரபரப்பும் படத்துல இல்லை படம் பாக்குற நமக்கு எதுவுமே இருக்காது.படத்துல மொக்க வில்லன் கேரக்டரை எங்கயும் பார்க்க முடியாது.சமீபத்தில் வந்த படத்துல கதை திரைக்கதை பாட்டு சண்டை எதுவுமே ஒர்க் அவுட் ஆகாத படம் இது என கூறியுள்ளார்
Embed video credits : Tamil Talkies
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in