The Indian Times

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நடிகை ராதா மகள் திருமண நிச்சயம்.. வைரலாகும் புகைப்படங்கள்

இயக்குனர் சிகரம் பாரதி ராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராதா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடித்து மிக பிரபலமாகினார்.இவர் நடித்த முதல் மரியாதை படம் இவருக்கு மேலும் சிறப்பினை பெற்றுக்கொடுத்தது.

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் ராதா,தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

தாயை போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என கார்த்திகா மற்றும் துளசி என்ற இரண்டு மகள்களும் சினிமாவில் களம் இறங்கினர்.அதில் கார்த்திகா நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் அறிமுகம் ஆகினார்.இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் இவருக்கு தற்போது திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது.இந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in