The Indian Times

இத சுட்டி டிவிலதான் போடணும்.. ஆதிபுருஷ் படத்தினை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளவர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி படம் தமிழில் பெரும் வரவேற்பினை அளித்தது.இதனால் தற்போது அவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் தமிழ் மொழிகளிலும் வெளியாகி வருகிறது.பாகுபலி இரண்டு பாகங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய ராதே ஷியாம் பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

Advertisement

தற்போது இப்படத்திற்கு அடுத்து இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ் நடித்துள்ளார்.இராவணன் ஆக ஹிந்தி நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார்.கதாநாயகியாக க்ரிதி சனோன் நடித்துள்ளார். பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த டீசரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்

Advertisement

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் பொம்மை படம் போல் உள்ளதாகவும்,இப்படத்தினை எடுப்பதற்காகவா இவ்வளவு சீன போட்டீர்கள் என பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர் மேலும் இதனை சுட்டி டிவியில் தான் போட வேண்டும் எனவும் கிங் காங் படம் போன்ற ஹாலிவுட் படத்தினை காப்பியடித்துள்ளதாகவும் விமர்சனம் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.மீம்ஸ்கள் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in