The Indian Times

TWITTER-ல் கல்வி உதவிக்கு பணம் கேட்ட ஏழை பெண்ணுக்கு உடனே உதவிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார்.

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.

Advertisement

தற்போது ஜிவி பிரகாஷ் குமார் செய்த விஷயம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது .கும்பகோணத்தினை சேர்ந்த மாணவி ஒருவர் தான் கல்லூரி படித்துவருவதாகவும்,தேர்வுக்கு கட்ட பணம் இல்லை என்பதால் ட்வீட்டரில் ஜிவி பிரகாஷ் குமாரிடம் உதவி கோரியுள்ளார்.அதனை பார்த்த ஜிவி உடனே அவரிடம் வங்கி கணக்கினை வாங்கி பணத்தினை அனுப்பியுள்ளார்.இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in