The Indian Times

வெள்ளித்திரையில் கால் தடம் பதிக்கும் BIGG BOSS தாமரை..படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம்

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்.

Advertisement

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்

Advertisement

தற்போது தாமரைக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி தாமரை நடித்து வருகிறார்.அங்கு உள்ள நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தான் படத்தில் நடித்துவருவதாக தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் தாமரைக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in