அதிதி சங்கர் உடன் மரண குத்து போட்ட சாண்டி மாஸ்டர்

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

அதிதி சங்கர் உடன் மரண குத்து போட்ட சாண்டி மாஸ்டர் 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாண்டிக்கு தமிழ் சினிமாவில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை .தனது நகைச்சுவை திறமையால் போட்டியாளர்களிடம் மட்டும் நற்பெயரை பெறவில்லை மக்களிடமும் தான்.இறுதி வரை வந்து அவர் தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் முகேன் வெற்றி பெற்றது,இவரது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தினை அளித்தது என்று தான் கூறவேண்டும்.அந்த அளவிற்கு இவர் மக்களின் மனதினை கவர்ந்திருந்தார்.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

அதிதி சங்கர் உடன் மரண குத்து போட்ட சாண்டி மாஸ்டர் 2

விளம்பரம்

விருமன் படத்தில் சாண்டி அதிதி சங்கருக்கு நடனம் சொல்லி கொடுத்துள்ளார்.அப்பொழுது இருவரும் நடனம் ஆடி ரீல்ஸ் செய்துள்ளனர்.இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த சாண்டி ரசிகர்கள் இப்படி புது புது நடனங்களை உங்களால் மட்டும் தான் போட முடியும் என கமெண்ட் செய்து அவரை பாராட்டி வருகின்றனர் மேலும் முதல் படத்திலேயே நடனத்தில் அசத்திய அதிதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment