கேப்டன் செய்த முதல் நாள் வசூல்…

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

கேப்டன் செய்த முதல் நாள் வசூல்... 1

விளம்பரம்

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.கேப்டன் படம் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

கேப்டன் செய்த முதல் நாள் வசூல்... 2

விளம்பரம்

படம் ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.இது இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜனுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.இதுவரை எடுத்த வித்தியாசமான கதைகளில் எந்தவித சொதப்பலும் இல்லாமல் சிறப்பாக திரைக்கதை இயக்கி வந்த சக்தி சவுந்தராஜன் இம்முறை தவறவிட்டுள்ளது ரசிகர்களிடம் ஏமாற்றத்தினை அளித்துள்ளது.முதல் நாள் முடிவில் இப்படம் ரூ.1முதல் ரூ.1.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment