சிறிய நடிகைக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்…..

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

சிறிய நடிகைக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்..... 1

விளம்பரம்

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.அண்மையில் இப்படத்தின் இசை மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

சிறிய நடிகைக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்..... 2

விளம்பரம்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த இசைவெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு ட்ரைலரை வெளியிட்டனர்.இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரிகிடா மணிரத்தினத்தினை கண்டு அருகே சென்றுள்ளார்.அவரை பார்த்த மணிரத்தினம் உடனே எழுந்து நின்று அவருடன் பேசியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய மனிதர் சிறிய நடிகையையும் இப்படி மதித்து நடந்துகொள்கிறாரே என ரசிகர்கள் பெருமளவு வியந்து பாராட்டி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment