The Indian Times

பைக்-க்கு கொஞ்சம் ரெஸ்ட், தனி ஹெலிகாப்டரில் லடாக்கை சுற்றி பார்க்கும் தல அஜித்.! வைரல் வீடியோ

தல அஜீத் தற்போது ஹெலிகாப்டரில் செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. வலிமை படத்திற்குப் பின்னர் தல அஜீத் தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். வலிமை படம் கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது. இதனால் எச்.வினோத்துடன் இணைந்து அடுத்த படத்தில் கவனமாக நடித்து வருகிறார் அஜீத். இதற்காக படபிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூரே இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைத்து ஐதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான படபிடிப்புகள் முடிந்துள்ளதாக தெரிகிறது. விரைவில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படப்பிடிப்புகளில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வதற்காக அஜீத் குமார் லடாக் சென்றுள்ளார். அங்கு அவருடன் ஏகே 61 பட கதாநாயகி மஞ்சு வாரியரும் உடன் சென்றுள்ளார். இரண்டு வாரங்களாக பைக் ரைட் சென்று அந்த புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

Advertisement

இந்த நிலையில் இன்று மணாலியை சுற்றிப் பார்ப்பதற்காக தனி ஹெலிகாப்டரில் பறந்து இருக்கிறார் அஜீத். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அஜீத்தின் நண்பர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். வீடியோவை பார்த்த அஜீத் ரசிகர்கள் செம்ம மாஸாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in