The Indian Times

நான் கடவுள் படத்துல நடிச்சேன் சம்பளம் தராம ஏமாத்திட்டாங்க…நடிகர் க்ருஷ்ணமுர்த்தி

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் பாலா.இவரின் படங்கள் என்றாலே சோகத்தில் தான் முடியும் என்பதே ஐதீகம்.அந்தளவிற்கு திரையரங்கில் இருந்து வெளியே வருபவர்களை கண் கலங்க வைத்து தான் அனுப்புவார் பாலா.இவர் 1999 ஆம் ஆண்டு நடிகர் விக்ரமை வைத்து சேது படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.சிறந்த இயக்குனருக்கான தமிழக சினிமா விருது மற்றும் தேசிய விருதையும் முதல் படத்திலேயே பெற்று பிற இயக்குனர்களை அதிர வைத்தார்.சினிமாவில் போட்டி போட்டு படங்களை இறக்கி முன்னணி இயக்குனராக உருவெடுத்தார்.இவர் எடுக்கும் படங்களில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு ஒரு தைரியம் தான் வேண்டும் ,அந்தளவிற்கு படப்பிடிப்பில் பாடாய் படுத்துவார் என பலரும் கூறியுள்ளனர்.

Advertisement

இவர் இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவிற்கு நல்ல தரமான படங்களை தயாரித்து வருகிறார்.தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.இந்நிலையில் தற்போது பாலா மீது புதிய புகார் ஒன்று கிளம்பியுள்ளது.நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகிய நான் கடவுள் படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தில் மாற்றுத்திறனாளிகள் பலரும் நடித்துள்ளனர்.இப்படத்தில் நடித்த மாற்றுத்திறனாளி ஒருவர் தற்போது அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அப்படத்திற்காக எனக்கு சம்பளம் தரவில்லை என கூறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது

Advertisement

இப்படத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருவராக நடித்தவர் தான் கிருஷ்ண மூர்த்தி,.இவர் பாடகரும் கூட,இரண்டு முறை தேசிய விருதுகள்,கலைமாமணி விருதும் வாங்கியுள்ளார்.பத்ம ஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார் இவர். இவருக்கு இரண்டு கைகள் மற்றும் கால்கள் கிடையாது.சாதிக்க ஊனம் தடையில்லை என்று நிரூபித்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார்கள்.இவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது,நான் கடவுள் படத்தில் 3 மாதங்கள் கஷ்டப்பட்டு நடித்தேன்,எனக்கு லட்ச ருபாய் சம்பளம் பேசிவிட்டு தரவில்லை என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Embed video credits : Indiaglitz

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in