The Indian Times

ஆல்யாவை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் ARSH… ப்பா என்ன CUTE

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.இவர்கள் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது

சஞ்சீவ் குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட அனைவரையும் உணவகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு கடல் உணவுகளை வித விதமாக சாப்பிட்டு குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டுள்ளார்.அங்கிருந்து கிளம்பும் பொழுது ஆல்யா மகன் அர்ஷ்க்கு சிரிப்பு காண்பிக்க அம்மாவை பார்த்து குலுங்கு குலுங்கி சிரித்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்தவர்கள் குழந்தையின் சிரிப்பினை பார்க்கும்பொழுது தங்களது கஷ்டங்கள் பறந்தோடியதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : SANJIEV & ALYA

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in