The Indian Times

ROBO DRUMS வாசிக்க…மைனா ஆட..KPY CHAMPIONS FINALE களைகட்டிட்டு

விஜய் தொலைக்காட்சி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.விஜய் டிவி பலரின் திறமைகளை கண்டறிய பெரும் கருவியாக உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரிடமும் இருக்கும் திறமைகளை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை புகழின் உச்சியில் தூக்கி உட்கார வைக்கிறது.அந்தளவிற்கு பல திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.விஜய் தொலைக்காட்சியில் உள்ள பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இதில் கலந்துகொண்டு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை வெகுவாக சிரிக்க வைக்கின்றனர்.நிகழ்ச்சியில் நடுவராக மதுரை முத்து,அர்ச்சனா மற்றும் ரோபோ சங்கர் உள்ளனர்.போட்டியாளர்கள் மத்தியில் நடுவர்கள் செய்யும் நகைச்சுவையும் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் விதமாக தான் அமைந்துள்ளது.

தற்போது இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்றுள்ளது.போட்டியாளர்கள் வெறித்தனமாக தங்களது திறமைகளை காண்பித்து அனைவரையும் அசத்தியுள்ளனர்.சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார்.நாளை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.இதனை காண ரசிகர்கள் பெரும் ஆவலாக உள்ளனர்.தற்போது இந்த நிகழ்ச்சியில் ஆதவன் பாட்டு பாட ரோபோ சங்கர் டிரம்ஸ் வாசிக்க மைனா நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

https://youtu.be/0n2HO9NjlgQ

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in