The Indian Times

குரங்குகளுக்கு உணவளித்த ஸ்ரேயா சித்து …என்ன மனசுய்யா நம்ம ஸ்ரேயாவுக்கு

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

தற்போது ஸ்ரேயா கடையில் பிஸ்கட் வாங்கி குரங்குகளுக்கு உணவு அளித்துள்ளார்.குரங்குகள் அனைத்தும் மகிழ்ச்சியாக ஷ்ரேயாவிடம் வந்து பிஸ்கட்டுகளை வாங்கி சென்றுள்ளது.இந்த வீடியோவை தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அக்கா சூப்பர் உங்க மனசுக்கு நீங்க எப்போவும் இப்படியே மகிழ்ச்சியா இருப்பீங்க என கூறி ஸ்ரேயாவை வாழ்த்தி வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

https://youtu.be/3-CgOvU_E8E

Embed video credits : SHREYA & SIDHU

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in