The Indian Times

என்ன கோபி உன் நிலைமை இப்படி ஆகிட்டு…. தூக்க முடியாமல் பொருட்களை தூக்கிட்டு வந்த கோபி நிலைமையை வச்சி செய்த தாத்தா… பாக்கியலட்சுமி 

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.இந்த தொடரில் கதாநாயகியாக சுசித்ரா நடித்து அசத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,இதில் தாத்தா கோபியை பார்த்துட்டு அந்த வீட்டுல ஆயிரம் அதிகாரம் பண்ணுவே,இப்போ இங்க வந்து பொதி சுமக்குறியே என கூறி உன் நிலைமையை பார்த்தியா போ போ என பயங்கரமாக கலாய்த்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது ராதிகா வீட்டில் பாக்கியவாக கோபி உள்ளார் என கூறி அவர்களும் கோபியை கலாய்த்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=iDM523O9DB4

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in