The Indian Times

நயன்தாரா விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டதோடு அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று அணைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடிகை நயன்தாரா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்தது. விக்னேஷ் சிவன் தமிழில் நானும் ரௌடித்தான், தானா சேர்ந்த கூட்டம் என்ற படங்களை இயக்கி உள்ளார்.

Advertisement

இவர் தற்போது விஜய் சேதுபதி , சமந்தா ஆகியோரை வைத்து காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தி வெளியிட்டுள்ளார். தற்போது சோசியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் அந்த புகைப்படம் தான் இருக்கிறது.

Advertisement

விக்னேஷ் சிவன் நெஞ்சின் மேல் நயன்தாரா கை வைத்தபடி புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரது விரலில் ரிங் அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்க்கும்போது நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் நிச்சயம் ஆகிவிட்டதா என்ற குழப்பம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in