மைனாவுடன் அறந்தாங்கி நிஷா போட்ட குத்தாட்டம்… அசந்து போன ரசிகர்கள்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

மைனாவுடன் அறந்தாங்கி நிஷா போட்ட குத்தாட்டம்... அசந்து போன ரசிகர்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

மைனாவுடன் அறந்தாங்கி நிஷா போட்ட குத்தாட்டம்... அசந்து போன ரசிகர்கள் 2

விளம்பரம்

பல முயற்சிகளுக்கு பிறகு இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார் நிஷா.சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தும் வருகிறார்.தற்போது இவர் மைனா நந்தினியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இருவரது நடனமும் சூப்பர் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment