வாடா மகனே… புகழை மடியில் போட்டு கொஞ்சிய வெங்கடேஷ் பட் மற்றும் தாமு

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

வாடா மகனே... புகழை மடியில் போட்டு கொஞ்சிய வெங்கடேஷ் பட் மற்றும் தாமு 1

விளம்பரம்

பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படி படிப்படியாக வளர்ந்து வருகிறார் புகழ்

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

வாடா மகனே... புகழை மடியில் போட்டு கொஞ்சிய வெங்கடேஷ் பட் மற்றும் தாமு 2

விளம்பரம்

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரையும் அப்பா என அழைத்து அன்பாக நடந்துகொள்வார்.இந்நிலையில் அண்மையில் இவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் புகழை மடியில் அமர வைத்து மகனை போல கொஞ்சியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.புகழ் ரசிகர்கள் பட் மற்றும் தாமுக்கு புகழ் மேல் இருக்கும் பாசத்தினை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment