The Indian Times

செம்ம கெத்தாக பைக் ஒட்டி MASS காண்பித்த பிக் பாஸ் ஆயீஷா

விஜய் தொலைக்காட்சியில் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சி மூலம் தான் முதல் முறையாக கேமிராவை சந்தித்து சின்னத்திரையில் தோன்றியவர் ஆயீஷா.பின்னர் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.அதனை தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு ரசிகர்களிடம் அங்கீகாரம் கொடுத்தது ஜீ தமிழில் இவர் நடித்து வந்த சத்யா என்ற சீரியல் தான்.இந்த சீரியல் இவருக்கு மாபெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது,திரும்பும் பக்கமெல்லாம் சத்யா தொடர் பற்றித்தான் பேச்சு என்று கூறினால் மிகையாகாது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது வரை இவரை ரசிகர்கள் சத்யா என்று தான் அழைத்து வருகிறார்கள் அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.பின்னர் டிக் டாக்கில் மிக பிரபலம் ஆகினார்.மேலும் லட்ச கணக்கானோர் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.தற்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். போட்டியாளர்களிடம் அவ்வப்பொழுது வெடித்து சிதறி வருகிறார் ஆயீஷா.பின்னர் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது யாரும் எதிர்பார்க்கா விதமாக ஆயீஷா கெத்தாக பைக் ஒட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.வழக்கம் போல் ஆயீஷா ரசிகர்கள் வீடியோவுக்கு லைக்குகளை கொடுத்து இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in