The Indian Times

தூக்க மாத்திரை கலந்துகொடுத்து கண்ணம்மாவை பள்ளியில் தூங்க வைத்த வெண்பா… பறிபோன கண்ணம்மாவின் வேலை… பாரதி கண்ணம்மா 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

முதல் சீசன் வெற்றிபெற முக்கிய காரணமே வெண்பா கதாபாத்திரம் தான் தற்போது அதே கதாபாத்திரத்தை மீண்டும் பாரதி கண்ணம்மா 2வில் கொண்டு வந்துள்ளனர்.மிரட்டலாக வெண்பா மீண்டும் வந்து தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.அண்மையில் கண்ணம்மாவிடம் அடி வாங்கிய வெண்பா அவரை பழிவாங்க தண்ணீரில் தூக்க மாத்திரை கலந்துகொடுக்கவே அதை குடித்து விட்டு கண்ணம்மா மயங்குகிறார்,இந்நிலையில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சண்டையிடவே அங்கு வந்து பார்த்த பாரதி அம்மா கண்ணம்மாவை வேலையே விட்டு நீக்குகிறார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in